Saturday, May 4, 2024
-- Advertisement--

கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த ஷங்கரின் மகள் அதிதி அடுத்த படம் பற்றி கசிந்த தகவல்…!!! LIPSTICK உதடு வெள்ளை உடை அணிந்து கொள்ளை கொள்ளும் அதிதி.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் அதற்கு முன் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

ஜென்டில்மேன் படத்தில் நல்ல ஒரு கருத்தை முன் வைத்து படத்தை கமர்சியலாக எடுத்து இருந்ததால் அந்த படம் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களுக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல் முதல் படமே ஷங்கருக்கு பெரிய ஹிட் படமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை எடுத்துக் கொண்டு இயக்கி வந்த சங்கர் சில படங்களுக்குப் பிறகு முதல்வன் என்ற படத்தை எடுத்தார். முதல்வன் படம் அர்ஜுன் அவர்களுக்கு பெரிய ஹிட் படம் மட்டுமல்லாமல் இப்படி ஒரு முதல்வர் நமது நாட்டிற்கு கிடைக்க மாட்டார்களா என்று பலரை ஏங்க வைத்தது.

ஒரு நாள் முதல்வர் என்ற கான்செப்டை எடுத்துக் கொண்டு சங்கர் சுற்றி அமைத்த கமர்ஷியல் எல்மெண்ட்ஸ் படத்தை எங்கோ கொண்டு சென்றது. ரோபோக்கள் மீது அதிகம் ஆர்வம் கொண்ட சங்கர் தனது வாழ்நாள் கனவான எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எடுத்திருந்தார் அந்தப் படமும் மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சிட்டி, விசாகன் என இரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அசத்தி இருந்தார் அதனை தொடர்ந்து 2 .0 படத்தை எடுத்தார் எதிர்பார்த்த அளவிற்கு அனைவரையும் கவரவில்லை.

தற்பொழுது லைக்கா தயாரிப்பில் உலக நாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

முதல் முதலாக தனது மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகப் படுத்த நினைத்த சங்கர் நல்ல கதைகளை கேட்டு வந்தார். நல்ல கதாபாத்திரமாக இருந்தால் தான் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடிக்க முடியும் என்பதை இயக்குனராக சங்கருக்கு தெரியும் என்பதால் தனது மகளின் முதல் படம் முத்தையா அவர்கள் இயக்கி வரும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.

விருமன் படத்தில் சங்கரின் மகள் அதிதி சங்கருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. எப்போதாவது சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் அதிதி தற்பொழுது உதட்டில் லிப்ஸ்டிக் வெள்ளை நிற உடையில் செம அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதிதி அடுத்த படம் கண்டிப்பாக முன்னணி நடிகருடன் தான் இருக்கும் என்று சினி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles