Saturday, May 18, 2024
-- Advertisement--

பாண்டிச்சேரி கடற்கரையில் குட்டை உடை போட்டு போட்டோஷூட் எடுத்த சிவகார்த்திகேயன் பட நடிகை..!!!

ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற சிவகார்த்திகேயன் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்தவர். பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த ஷாலு ஷம்மு அடிக்கடி ஏதாவது போட்டோ ஷூட் செய்து தனது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு பிரபலம் அடைந்தவர்.

குறிப்பாக இவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் நடனமாடிய வீடியோ படு வேகமாக பரவி வைரலானது. அதனைத் தொடர்ந்து ஷாலு சம்மு சினிமாவில் உள்ள அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி ஓபன் ஆக கூறியிருந்தார் அதில் பெரிய நடிகர்கள் படங்களில் சமரசம் செய்து கொள்ளாவிட்டால் பெண்களின் திறமை நிராகரிக்கப்படுகிறது. எங்களுக்கு மாற்றம் வேண்டும் துன்புறுத்தலை நிறுத்துங்கள் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம் என்று கூறியிருந்தார்.

அவர் கூறியதை பார்த்தால் பெரிய நடிகர்களில் ஒருவர் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ஷாலு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதுபோன்ற விஷயங்களை தவிர்த்துக் கொண்டால் எங்களைப் போன்ற நடிகைகள் சினிமாவில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

அடிக்கடி ஏதாவது போட்டோ சூட் போட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வரும் அவர் தற்போது பாண்டிச்சேரி கடற்கரையில் குட்டை உடையணிந்து போட்டோஷூட் செய்துள்ளார் அந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles