மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய விமானப்படையின் முதல் பெண் தளபதியாக ஷாலிசா தாமி. இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனாக ஷாலிசா தாமி மேற்கு இந்திய சட்டத்தின் போர்படை பிரிவின் தளபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்திய விமானப்படையின் வரலாற்றில் போர் பிரிவின் தளபதி பொறுப்பை ஏற்ற முதல் பெண் அதிகாரி சாலிசா தாமி பெருமையைப் பெற்றுள்ளார்.
இவர் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரசு பள்ளியில் பள்ளி படிப்பை முடித்துள்ளார். மேலும் லூதியானாவில் உள்ள பெண்களுக்கான கல்சா கல்லூரியில் உயர் படிப்பை முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் பைலட்டாக IAF தனது பயணத்தை தொடங்கினார்.
தனது திறமையால் சீட்டா மற்றும் சேடக் ஹெலிகாப்டர்களில் 2,800 மணி நேரம் பறந்து குரூப் கேப்டன் பதவி வரை படிப்படியாக உயர்ந்துள்ளார். IAF வில் குழு கேப்டன் ராணுவத்தில் ஒரு கர்னலுக்கு சமமாவார். ஆண்களுக்கு நிகராக பெண்களும் நிரந்தர கமிஷன் பதவிகள் மற்றும் கமெண்ட் பொறுப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.
இதனை கடந்த ஆண்டு அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பெண்களுக்கு ராணுவ அதிகாரிகளாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஷாலிசா தாமி மார்ச் மாதம் பஞ்சாபில் தரையிலிருந்து வான் நோக்கி பாயும் ஏவுகணை படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அதோட மேற்பகுதி படை பிரிவில் ஹெலிகாப்டர் பிரிவின் விமான தளபதியாகவும் பணியாற்றி உள்ளார்.
இவர் இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் பியூரி கார்ப்ஸின் கேப்டன் அதோட சியாச்சியில் உள்ள உலகின் மிக உயரமான போர்க்களத்தில் செயல்படும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய ராணுவ படையில் பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்து வருகிறது. தற்போது 145க்கும் மேற்பட்ட பெண்கள் ஹெலிகாப்டர் மற்றும் போக்குவரத்து விமான பைலட்டுகள் உள்ளனர்.