அஜித் குமார் தமிழ்நாட்டில் தமிழ் மக்களால் தல என்று அன்பாக அழைக்கப்படும் ஒரே நடிகர் அஜித். ஒரு நேரத்தில் ரஜினி கமலை நம்பியிருந்த தமிழ் சினிமா தற்போது விஜய் அஜித்தை நம்பும் அளவிற்கு இவர்களின் வளர்ச்சி பெரிதாக உள்ளது. விஜய் ஒரு வழியில் செல்ல அஜித் வேறு ஒரு வழியில் திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இருவரும் போட்டியாளர்கள் என்றாலும் இவர்களுக்குள் இருப்பது ஆரோக்கியமான போட்டி மட்டுமே. அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அமர்க்களம் படப்பிடிப்பின்போது ஷாலினி மீது அவர் கொண்ட காதலை படக்குழுவினரை நேரில் கண்டனர். உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்ற அமர்க்களம் படத்தின் பாடலை லவ் லெட்டர் எழுதி அவரது காதலி ஷாலினிக்கு கொடுத்துள்ளார். ஷாலினி மீது தீராத அன்பு கொண்ட அஜித் பெற்றோர்கள் சம்மதத்துடன் ஷாலினியை மணந்தார்.
அன்று ஆரம்பித்த காதல் என்றும் குறையாமல் அன்போடு இருக்கிறார்களாம் அஜித்-ஷாலினி. அஜித் நடிப்பில் வித்தியாசமான கதை களம் கொண்ட “என்னை அறிந்தால்” படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தன் கணவருக்காக கர்ப்பமாக இருந்த நேரத்திலும் கூட்ட நெரிசலில் தன் கணவரை திரையில் கண்டு அதிக சந்தோஷம் அடைந்தார். கர்ப்பமான நேரத்திலும் தன் கணவரை திரையில் காண வந்த ஷாலினியை திரையரங்க உரிமையாளர்கள் பாதுகாப்பாக படம் பார்க்க வைத்து வழியனுப்பி வைத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

