Monday, May 20, 2024
-- Advertisement--

அண்ணாத்த படத்தை பார்க்க தியேட்டருக்கு மகனுடன் சென்ற ஷாலினி அஜித்..!!! வெளியான புகைப்படங்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த தீபாவளி தினத்தன்று உலகமெங்கும் வெளியானது. சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த ஆக்சன் படமாக வெளிவந்துள்ள அண்ணாத்த கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் அரங்கம் நிறைவாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தல அஜித்தின் விஸ்வாசம் என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய சிறுத்தை சிவா அவர்கள் இந்த படத்தை இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட விஸ்வாசம் படத்தில் நடித்திருக்கும் அஜித்திற்கு பதில் ரஜினி ரோபோ சங்கருக்கு பதில் சூரி, மகள் சென்டிமென்ட் அதற்கு பதில் தங்கை சென்டிமென்ட் என்று விஸ்வாசத்தை எடுத்தது போல தான் இருந்தது.

தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என்ற தொடர் வெற்றிகளை கொடுத்த சிறுத்தை சிவா விவேகம் என்று அஜித்தை வைத்து ஒரு படம் எடுத்தார். அந்தப் படம் அஜித் ரசிகர்களே வெறுத்து போகும் அளவிற்கு இருந்தது. சிறுத்தை சிவாவுடன் இணைந்து இனி எந்த செய்யாதீங்க தல என்று பலர் அஜித்துக்கு அறிவுரை கூற ஆரம்பித்தார்கள்.

அதை எதையும் பொருட்படுத்தாமல் சிவா மீது உள்ள நம்பிக்கையால் மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்தார் அஜித். அஜித் மற்றும் சிவாவும் விஸ்வாசம் என்ற படத்தில் மீண்டும் இணைந்தார்கள். விஸ்வாசம் படம் அஜித் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது அனைத்துத் தரப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. விஸ்வாசம் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சிறுத்தை சிவாவை அழைத்து பாராட்டியதோடு தனக்கு ஒரு கதை சொல்லுமாறு கூறியிருந்தார் அதுதான் அண்ணாத்த .

தீபாவளி தினத்தில் வெளியான அண்ணாத்த படத்தை பிரபலங்கள் அனைவரும் பார்த்து வருகின்றன இந்நிலையில் தல அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகன் ஆத்விக்குடன் அண்ணாத்த படத்தை சினிமா தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்துள்ளார். இணையத்தில் தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles