Thursday, May 9, 2024
-- Advertisement--

அன்னையர் தினத்தன்று மகளுடன் நடிகை ஷகிலா வெளியிட்ட புகைப்படம்..!!! குவியும் லைக்ஸ்.

நடிகை ஷகிலா மலையாளத்தில் கவர்ச்சி படங்கள் மூலம் பிரபலமானவர் அதன்பின் பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார். ஆபாசமான படங்களில் நடித்து வந்த இவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷகிலாவிற்கு மேலும் அந்த நிகழ்ச்சி பெரிய பிரபலத்தை கொடுத்தது.

ஷகிலா திடீரென்று தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைச் திரையில் இணைந்தார் அவருக்கு மனித உரிமை பேரவையின் மாநில பொதுச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.

பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவது மன வேதனையாக இருக்கிறது பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுவோர்க்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறிய ஷகிலா குறிப்பாக பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வந்து இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சகிலா நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மகள் மிலாவுடன் இணைந்து போட்டோ ஷுட் செய்து அன்னையர் தினத்தன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதில் சகிலா மேனகாவாகவும் அவரது மகள் மிலா சகுந்தலாவாகவும் வேடமிட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles