ஷகிலா கேரளா நடிகைகளில் இவருடைய கொடி ஒரு நேரத்தில் ஓஹோவென்று பறந்தது. ஷகிலா படம் ரிலீஸ் என்றால் பெரிய நடிகர்கள் தங்களது படத்தை வெளியிட தயங்குவார்கள். அந்த அளவிற்கு ஷகிலாவின் படங்கள் வசூல் செய்ததாம். ஷகிலாவை வைத்து தயாரிப்பாளர்கள் கோடீஸ்வரன் ஆனவர்களும் உண்டாம். ஒரு நேரத்தில் சகிலாவின் திரைப்படம் திரையிடக்கூடாது என்று கேரளத்தில் போராட்டம் நடத்தியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்பொழுது ஷகிலாவின் வாழ்க்கையை உண்மை சம்பவத்தை திரைப்படமாக எடுத்து பல மொழிகளில் வெளியிட உள்ளார்கள். ஷகிலாவின் வாழ்க்கை படம் மக்கள் பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட படக்குழு ஷகிலாவை அந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்தார்கள்.
அப்பொழுது பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஷகிலா அரசியல் வருகை பற்றியும் தெரிவித்திருந்தார். பத்திரிக்கையாளர் ஒருவர் அரசியலில் வருவதற்கு எண்ணம் இருக்கா என்று கேட்டதற்கு ஷகிலா கூப்பிட்டா வருவேன் என்று கூறினார்.
நான் நடிகை ஆவேன் என்று நான் நினைத்து பார்த்தது இல்லை கடவுள் தான் என்னை நடிகை ஆக்கினார். அதேபோல் என் வாழ்க்கையின் இறுதியை கடவுளிடமே ஒப்படைக்கிறேன் என்று கூறியிருந்தார்.
திரைத்துறையில் நிறைய தற்கொலைகள் செய்துகொள்கிறார்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் தற்கொலை பண்ணிக்க வா என்று கேட்ட ஷகிலா அது அவரவர் இஷ்டம் என்னை பொருத்தவரை தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழையானவர்கள் என்று கூறியிருந்தார்.
அரசியல் என்பது நம் நாட்டை யார் ஆளவேண்டும் யார் வழிநடத்த வேண்டும் என்ற முக்கியமான விஷயம் அதில் பேருக்கு அரசியலில் வரும் நடிகர் நடிகைகள் வராமலே இருக்கலாம் என்று ரசிகர்கள் தங்களது கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.