டி ஆர் பி யில் முதல் இடத்தை மட்டும் பிடித்தது அல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் விரும்பிப் பார்க்கும் சீரியலில் ஒன்றுதான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி . 2017 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் இன்று வரை விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
அகிலாண்டேஸ்வரி ஆக நடிகை பிரியா ராமன் நடித்து வருகிறார். இவருக்கு மகனாக ஆபிஸ் சீரியலில் பிரபலமான கார்த்திக் ராஜ் என்பவர் நடித்து வந்தார். கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா ஷாஜகான் ஜோடி இந்த சீரியலில் ஆதி – பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்திருந்தனர். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த செம்பருத்தி சீரியல் இயக்குனரை முதலில் மாற்றினார்கள் ஜீ தமிழ். அதன்பின் ஆதியின் நண்பராக நடித்த ஷாம் என்பவரை எந்த ஒரு காரணம் சொல்லாமல் தூக்கியது ஜீ தமிழ். சமீபத்தில் அகிலாண்டேஸ்வரியின் இரண்டாவது மருமகளாக நடித்த ஜனனி அசோக் குமாரை எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சீரியலை விட்டு நீக்கினார்கள். செம்பருத்தி சீரியல் விட்டு ஜனனியை நீக்கியதற்கு பிறகு கண் கலங்கி அவர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
தற்பொழுது ஜீ தமிழ் ரசிகர்களுக்கு அளித்த பெரிய அதிர்ச்சி என்னவென்றால் இந்த சீரியலில் ஆதியாக நடித்துவரும் கார்த்திக் ராஜ் என்பவரை ஜீ தமிழ் மாற்றப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. ஆதியாக கார்த்திக் நன்றாக நடித்திருந்தார் ஏன் திடீரென்று கார்த்திக்கை மாற்றுகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் கேட்கப்பட்ட வந்தது.
மௌனம் காத்து வந்த ஜீதமிழ் தற்பொழுது திடீரென்று ஆதி கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பதை உறுதிசெய்துள்ளது. பிரபல வெப் சேனல் BEHINDWOODS-ல் விஜேவாக பணியாற்றிய அக்னி என்பவர்தான் இனி ஆதி கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம்.
இதுகுறித்து அக்னி கூறியது என்னை உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். முடிந்த அளவிற்கு சிறப்பாக நடிக்க முயற்சி செய்கிறேன். உங்களுடைய ஆதரவு எனக்கு எப்போதும் தேவை என்று கூறிய அக்னி இந்த முடிவு என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் என்று யோசித்து எடுத்திருக்கிறேன் எனக்கு வாய்ப்பளித்த ஜீ தமிழ் மற்றும் செம்பருத்தி டீமுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.