ஜனனி அசோக்குமார் இவர் மாப்பிள்ளை என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி அதன் பின் மௌன ராகம் என்ற தொடரில் பாடல் கற்பிக்கும் டீச்சராக நடித்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். மௌனராகம் சீரியல் பெற்ற வரவேற்பு ஜீ தமிழில் இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் செம்பருத்தி என்ற தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஜனனிக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஜனனியின் ஹோம்லியான தோற்றமே அவரை அனைவருக்கும் பிடிக்க காரணம் என்று கூட கூறலாம். அதுமட்டுமல்லாமல் ஜனனி சின்னத்திரைக்கு வருவதற்குமுன் “நண்பேன்டா” என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து இருந்தார்.
அடிக்கடி ஏதாவது மாடலிங் செய்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்த ஜனனி தற்பொழுது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் சாத்தான்குளத்தில் அப்பாவியாக இழந்த ஜெயராஜ் மற்றும் பின்னிக் இறப்பிற்கு நியாயம் கிடைக்கவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரையில் குரல் கொடுப்போம் என்று வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் இதேபோல சம்பவம் என் வீட்டிலும் நடந்திருக்கிறது அப்பொழுது நான் சிங்கப்பூரில் இருந்தேன். என் அண்ணனை இழந்தேன். அன்னையிலிருந்து எனக்கு போலீஸ் என்றாலே பிடிக்காது. காசு என்று ஒரு விஷயத்திற்காக மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் எப்படி இது போல நடந்து கொள்ள முடிகிறது. என் அண்ணனுடைய உடலைக் கூட பார்க்க முடியவில்லை. காசு கொடுத்தால் மட்டுமே பார்க்க முடியும் என்றார்கள். எப்போது இதுபோன்ற சம்பவத்திற்கு எல்லாம் நியாயம் கிடைக்கும். என்று கதறி அழுது தனது வருத்தத்தை தெரிவித்தார்.