Friday, April 26, 2024
-- Advertisement--

தஞ்சாவூர் தேர் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன சசிகலா…!!! பத்திரிகையாளர்களிடம் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

தஞ்சாவூர் களிமேடு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தஞ்சாவூர் பகுதியில் மட்டுமல்லாமல் தமிழ் நாட்டையே உலுக்கியுள்ளது. சொந்த ஊரில் தேர் திருவிழா நடக்கப்போகிறது என்று மக்கள் சந்தோஷமாக ஒன்றுகூடி நடத்திய நிகழ்ச்சியில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது மக்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேரில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த குடுமத்தினரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

பார்வையிட்டதோடு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து அவர்கள் ஒவ்வொருத்தருக்கும் அரசின் சார்பில் ஆறுதலை கூறினார் . தேர் vவிபத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 1லட்ச ரூபாய் நிவாரணத் தொகையும் லேசான காயங்கள் அறிந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கி விட்டு வந்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். இறந்தவர்கள் குடும்பத்திற்கு திமுக சார்பாக இரண்டு லட்ச ரூபாய் நிவாரண தொகையாக அளித்துள்ளார்.

தேர் விபத்து சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில் தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. செய்தி அறிந்ததும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து அவர்கள் குடும்பத்திற்கு உடனடி நிவாரணமாக இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதுபோல தமிழக அரசு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது புதிய சாலை அமைக்கும் போது பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்றதால் சாலையின் உயரம் அதிகரித்து விபத்து நேரிட்டதாக வரும் செய்தியை தவிர்க்கமுடியவில்லை அரசு இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் மக்கள் வாழும் பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கம்பிகளை எல்லாம் மாற்றி விட்டு புறநகர் பகுதிக்கு நகர்புற பகுதிக்கு மாற்ற வேண்டும்.

93 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விழாவை பாரம்பரிய விழா பாதுகாப்புடன் அரசு முழு மரியாதையுடன் கொண்டாடி இருந்திருக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அ இ அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அவர்கள் தேர் தீவிபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்துள்ளார். அதன்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சசிகலா தஞ்சாவூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இறைவன் தைரியத்தையும் மன உறுதியும் கொடுக்கவேண்டும். தேர் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் திருவிழா காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளை அரசு முறையான குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles