Wednesday, May 22, 2024
-- Advertisement--

4 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் கால் எடுத்து வைக்கும் சின்னம்மா…!!! சின்னம்மாவின் வருகைக்காக காத்திருக்கும் அவரது தொண்டர்கள்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கர்நாடகாவில் உள்ள அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சசிகலா. தற்பொழுது 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைந்த பின் ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார் ஆனால் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா போன ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் ஆனார்.

மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் ஆனதும் அதிமுக கொடியை தனது காரில் பொருத்திவிட்டு பெங்களூர் புறநகரில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு ஓய்வு எடுக்கச் சென்றுள்ளார்.

சசிகலா விடுதலை ஆன உடனே அவருடைய தொண்டர்கள் வெடி வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வந்தனர். சின்னம்மா வாழ்க என்று கோஷமிட்டு உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள். சின்னம்மா வந்துட்டாங்க இனிதான் இருக்கு பாருங்க என்றெல்லாம் பேட்டி கொடுக்க ஆரம்பித்தனர்.

சசிகலா சிறையை விட்டு வெளியே வந்தவுடனே தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரப்போகிறது எங்க சின்னம்மா வெளியில வந்துட்டாங்க என்று பில்டப் பண்ண தொடங்கினார்கள். இதுகுறித்து அதிமுக அமைச்சர்கள் சசிகலா சிறையை விட்டு வருவதினால் எந்த ஒரு அரசியல் மாற்றமும் அதிமுகவில் நிகழாது என்று உறுதி அளித்தார்கள்.

இந்நிலையில் நேற்று மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களை சந்திக்கையில் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி சசிகலா தமிழகத்துக்கு வருவார் என தெரிவித்திருந்தார் ஆனால் பிப்ரவரி 7ஆம் தேதிக்கு பதில் தற்பொழுது பிப்ரவரி 8-ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழகம் வருவார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles