Friday, May 3, 2024
-- Advertisement--

எம்ஜிஆர்கே ஆலோசனை சொன்னேன் – சசிகலா பெருமிதம்…!!!

எம்ஜிஆர் ஆட்சி சம்பந்தமாக நிறைய விஷயங்கள் கேட்பார் நான் அவருக்கு ஆலோசனை கூறி உள்ளேன் என்று தூத்துக்குடி அதிமுக பிரமுகரிடம் சசிகலா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு சசிகலா பேசி வருகிறார். அதேபோல் தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகி ராமசாமியிடம் சசிகலா பேசிய ஆடியோ விவரம்: தலைவர் எம்ஜிஆர் மீது எனக்கு ரொம்ப பிரியம். அதனால் அப்போது முதலில் கட்சியில் பணி செய்து கொண்டிருந்தேன்.

ஜெயலலிதாவை சமாதானப்படுத்தி அவரை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்தேன். அந்த சமயத்தில் நான் எனது தாயாரை பார்க்க மன்னார்குடி சென்று இருந்தேன் தகவல் கேட்டு சென்னை திரும்பினேன். தலைவர் அப்படிதான் இருக்கணும் பாரு சிறுவயதில் எம்ஜிஆர் ரோடு சேர்ந்து பயணித்துளேன். கட்சி விஷயமாக என்னிடம் நிறைய விஷயங்கள் கேட்பார்.நானும் ஆலோசனைகளை சொல்லி உள்ளேன். இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று பொறுமையாக கேட்பார். அப்படித்தான் அவரிடமிருந்து பழகிக்கொண்டேன் ஜெயலலிதாவும் கோவமாக முடிவெடுத்தால் கூட தொண்டர்களுக்காக நீங்கள் பொறுமை காக்க வேண்டும். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

இதை கண்டு கொள்ளக் கூடாது என்று கூறிக்கொண்டு சென்றோம். அது சக்சஸ் புல்லா இருந்தது. ஒருமுறை ஜானகியம்மாள் கூப்பிட்ட போது ஜெயலலிதா கடும் கோபம் கொண்டார். அவரிடம் பேசி சமாதானம் செய்து சந்திக்க வைத்தேன். வரும் 5ஆம் தேதி வரை லோக்டவுன் சொல்லியுள்ளனர். அது முடிந்து விட்டால் புறப்பட்டு வருவேன். கண்டிப்பாக அனைவரையும் சந்திப்பேன் நடுக்கடலில் தத்தளித்து வரும் கப்பல் மூழ்கி விடுமோ என பயப்படுகின்றனர். வருத்தப்பட வேண்டாம் தொண்டர்களை பார்க்க நிச்சயம் தீவிர அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles