Wednesday, November 13, 2024
-- Advertisement--

வீட்டின் முன்பு 6000 புத்தகங்களை குவித்திருக்கும் “பெரிய பழுவேட்டரையர்’ சரத் குமார்…!!! காரணம் என்ன சொல்லிருக்காரு தெரியுமா.?

நடிகர் சரத்குமார் தனது இல்லத்தில் இருந்த சுமார் 6000 புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளார். இவரின் இந்த செயலுக்கு மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சரத்குமார் தன்னிடம் சுமார் 6000 புத்தகங்களை மக்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார். அதனை தனது வீட்டின் வாசலிலேயே அனைத்து புத்தகங்களையும் வைத்துள்ளார். மக்கள் உங்களுக்கு விருப்பமான புத்தகங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சரத்குமார் கூறுகையில்: நான் படித்த, தனக்கு அன்பளிப்பாக வந்த புத்தகங்கள் மற்றும் தந்தையார் எனக்கு விட்டுச் சென்ற புத்தகங்கள் என சுமார் 6000 புத்தகங்கள் உள்ளன. இதனை தினமும் எடுத்து படிப்பது என்பது சாத்தியமற்றது ஆகும். எனவே இந்த புத்தகங்களை பொக்கிஷமாக வைத்துக் கொள்வதை விட பிறருக்கு உதவும்மாறு வழிவகை செய்வது சிறந்தது.

அதுவே மகிழ்ச்சியை அளிக்கும். என்னிடம் உள்ள புத்தகங்களை நூலகங்களில் கொடுத்து விடலாம் என்று சொன்னார்கள், சிலர் விற்று விடலாம் என்றும் கூட சொன்னார்கள் ஆனால் இந்த புத்தகங்களை மக்களுக்கு இலவசமாக வழங்க வீட்டின் வெளியே இந்த புத்தகங்களை வைத்து இருக்கிறேன். நான் வீட்டில் இருக்கும் போது வாங்குவதற்கு புத்தகத்தில் நான் கையெழுத்திட்டு தந்து வருகிறேன்.

தற்போது தொழில்நுட்பம் காரணமாக புத்தகம் வாசிப்பது கைப்பேசி, அமேசான் கிண்டல், ஐ பேட், மடிக்கணினி போண்டாவற்றால் புத்தக வாசிப்பது குறைந்துவிட்டது. அதனால் புத்தக வாசிப்பை மேலும் மேம்படுத்த இந்த முயற்சியை மேற்கொண்டேன்.

இதுபோல பலரிடம் புத்தகங்களை அதிகமாக இருந்தால் அவர்களும் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று சரத்குமார் கூறியுள்ளார். இந்த முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த செயலை ரசிகர்கள் மனதார பாராட்டி வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles