கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு என நகைச்சுவை நடிகர்கள் ஆதிக்கம் செலுத்திய சினிமாக்கள் அதிகம். அவர்கள் நிறைய படங்களில் நடித்து இருந்தாலும் அவர்களுக்கு பிறகு யார் இந்த வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்ற சினிமா ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் வந்தவர் தான் சந்தானம்.
இவர் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக களம் இறங்கிய பிறகு இவருக்கு வந்த பட வாய்ப்புகள் அதிகம். இன்னும் சொல்ல போனால் இவருக்கு வருட கணக்கில் படங்கள் ஒப்பந்தம் ஆகி இருந்தன. இதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் வகையில் அவர் திடிரென்று கதாநாயகனாக நடிக்க போகிறேன். இனிமேல் நகைச்சுவை கதாபாத்திரம் இல்லை என்று சொல்லிவிட்டார்.
தற்போது இவர் இடத்தை பிடிக்க பல நகைச்சவை நடிகர்கள் முயற்சி செய்து வருகின்றனர். சந்தானம் அந்த அளவிற்கு முன்னேற காரணமாக இருந்த படம் மன்மதன் என்று அனைவரும் நினைத்து இருப்பர். ஆனால் அவர் இந்த படத்திற்கு முன்பே காதல் அழிவதில்லை என்ற படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று உள்ளார். இதோ அந்த புகைப்படம்.