தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலும் மிகப்பெரிய புகழ்பெற்ற குற்றவாளியாக கருதப்பட்டவர் வீரப்பன். சந்தனக்கடத்தல் மிகவும் பிரபலமான இவருக்கு சந்தன கடத்தல் வீரப்பன் என்ற பெயர் வந்தது. இந்நிலையில் இவரை பிடிக்க கர்நாடக மற்றும் தமிழக போலீஸ் மிகவும் சிரமப்பட்ட நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு அதிரடிப் படைகள் சுற்று வளைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
வீரப்பன் இவருக்கு என்று பல வரலாறுகள் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இவர் கர்நாடக மாநில முதல்வரை கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடத்தி வைத்திருந்தார். தமிழ்நாட்டு பிரபல பத்திரிக்கையான நக்கீரன் இவரை நேரில் சென்று பேட்டி எடுத்தார். இவரது கிராம மக்களுக்கு பல உதவிகளை செய்ததாக கூறப்படுகின்றது.
இவர் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் பல தரப்பு மக்களிடமும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இவரது மகளான வழக்கறிஞர் வித்யாராணி பாஜகவில் இணைந்துள்ளார். இவருக்கு பாஜகவில் புதிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் பாஜக முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்ட வித்யாராணி, இந்த கட்சியில் இணைந்தது குறித்து மக்களிடம் பேசினார். அப்பொழுது மக்களுக்கு சேவை செய்யவே நான் இந்த கட்சியில் இணைந்து இருப்பதாகவும் தன்னுடைய தந்தையின் எண்ணம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில் பாஜக கட்சியில் பல்வேறு பதவிகளை தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்திருந்தார். அதுபோல வீரப்பனின் மகள் வித்யாராணி முக்கிய பதவி ஒன்று வழங்கப்பட்டது. அவர் மாநில இளைஞரணி துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.