தமிழகத்தில் அதிகமாக பேசப்படும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர் ஆவார். பானா காத்தாடி படம் மூலமாக ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்து உள்ளார்.

இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து ஓரிரு ஆண்டுகளில் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலுக்கு டான்ஸ் ஆடிய காரணத்தினால் பான் இந்தியா ஆக்டர் ஆக மாறிவிட்டார் சமந்தா. அந்த பாடலும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் பாடலாக அமைந்தது.

சமீபத்தில் விஜய் தேவர்கொண்டா சமந்தா இணைத்து நடித்த குஷி திரைப்படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. அந்த படத்தில் ஒரு காட்சியில் சமந்தா செம பிரெஷ் ஆக இருப்பார் ஒரு சில காட்சிகளில் முகத்தில் எதோ களைப்புடன் இருப்பார்.

குஷி திரைப்படம் எடுக்கும் போதே மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சில காட்சிகள் சிரமப்பட்டு நடித்து கொடுத்தாராம் சமந்தா.

சமீபத்தில் சமந்தா அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் லைவ் சென்ற போது அவர் தனக்கு மயோசிட்டிஸ் என்னும் நோய் இருப்பதாகவும் அதனால் தான் நிறைய ஸ்டீராய்டு எடுத்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய சமந்தா தனது முகத்தை காட்டவே யோசிப்பதாகவும் பில்டர்கள் வழியாக ரசிகர்களுக்கு தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதாக கூறி இருக்கிறார். இதுபோன்று யார் ஒருவருக்கும் வரக்கூடாது எனவும் சமந்தா அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்ட ரசிகர்களும் மனமுடைந்த நிலையில் சமந்தாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.