Friday, May 3, 2024
-- Advertisement--

சமந்தா விவகாரத்து பதிவு திடீர் நீக்கம்..!!! ஒன்று சேர்கிறார்களா சமந்தா நாகசைதன்யா..!!! வெளியான தகவல்.

சமந்தா ஆரம்பத்தில் வெல்கம் கேர்ள் ஆக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த இவர் தமிழ் சினிமாவில் பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் முரளி அவர்களின் மகன் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார் முதல் படமே சமந்தாவிற்கு பெரிய வரவேற்பு கொடுத்தது.

கௌதம் மேனன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே படத்தை தெலுகுவில் எடுத்து வெளியிட்டார் கவுதம். அந்த படத்தில் நாக அர்ஜுன் அவர்களின் மகன் நாக சைதன்யா ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.

தமிழில் த்ரிஷாவின் ஜெஸி கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடித்து இருந்தார் சமந்தா. தெலுங்கு ரசிகர்களையும் எளிதில் கவர்ந்தார் தமிழ் தெலுங்கு என இரு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா நாக அர்ஜுன் அவர்களின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பல வருடங்கள் நன்றாக சென்று கொண்டிருந்த சமந்தாவின் வாழ்க்கையில் திடீரென்று சில பிரச்சனைகளால் சமந்தா நாக சைதன்யா இருவரும் பிரிந்தார்கள் இதனை ரசிகர்களுக்கு தெரியப்படுத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். நாக அர்ஜுன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் நாங்கள் இருவரும் பிரிகிறோம் தனித் தனியாகப் பயணிக்க விரும்புகிறோம் இந்த முடிவை நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்தது தான் என்று தெரிவித்திருந்தார்.

அதே அறிக்கையை சமந்தா அவர்களும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். யாரும் எதிர்ப்பார்க்காத தருணத்தில் இந்த ஜோடி வெளியிட்ட விவாகரத்து அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதன்பின் சமந்தா நாகசைதன்யா பிரிந்து அவரவர் வேலையை பார்த்து வந்த இந்நிலையில் சமந்தா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து விவாகரத்து பதிவை நீக்கியுள்ளார் இதனால் சமந்தா அவர்களும் நாகசைதன்யாவும் மீண்டும் இணைய போகிறார்களா என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் விவாதிக்க தொடங்கிவிட்டனர்.

சமந்தா தான் விவாகரத்து பதிவை நீக்கியுள்ளார் நாக சைதன்யாவும் நீக்கிவிட்டாரா என்று பார்த்தால் நாகசைதன்யா தனது விவாகரத்து பதிவை நீக்காமல் இருக்கிறார்.

இதுகுறித்து கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்த போது அட ஏங்க அவங்க சட்டப்படி விவாகரத்து வாங்கிட்டாங்க பதிவுகள் இடுவது நீக்காதது அவங்களோட இஷ்டம் இதை பெருசா பேசிட்டு இருக்காங்க என்று கூறியுள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles