Friday, May 17, 2024
-- Advertisement--

துணி கடை ஆரம்பித்த நடிகை சமந்தா..!!! குவியும் ஆன்லைன் ஆர்டர்கள்.

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இவரும் ஒருவர். பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சமந்தா. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் பல படங்கள் நடித்துள்ளார். பிரபல நடிகை அமலா நாகார்ஜுன் அவர்களின் மகன் நாக சைதன்யா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமந்தா திருமணத்திற்குப் பின்னும் ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். விதவிதமான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவார் சமந்தா. சமந்தாவிற்கு சினிமாவை தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருப்பதாக பல பேட்டிகளில் கூறி வந்தார். அதற்கான முயற்சியில் தற்போது சமந்தா இறங்கிவிட்டார்.

பெண்களுக்காக ஸ்பெஷலாக உடை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார் சமந்தா. அதில் விதவிதமான உடைகளை விற்பனை செய்ய உள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் அணிந்த உடைகளில் அவருக்குப் பிடித்தமான உடைகளை தயாரித்து அதனையும் விற்பனைக்கு தயார் செய்து வைத்துள்ளார்.

ரசிகைகள் சமந்தா அணியும் மாடல் போல உடை அணிய ஆசைப்பட்டால் அதற்காக தனி இணையதளத்தை உருவாக்கி உள்ளார் சமந்தா. பிடித்த டிசைனை வீட்டிலிருந்தே தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம். உடைகள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இந்த தொழிலை ஆரம்பித்ததாகவும் சமந்தா கூறியுள்ளார். இன்று தொடங்கியது ஆன்லைன் விற்பனை.

www.saaki.co என்ற இணையத்தளம் வழியாக உடைகளை வாங்கிக்கொள்ளலாம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles