மலையாள திரையுலகில் பிரேமம் என்னும் படம் மூலம் தென்னிந்தியாவுக்கு அறிமுகமான ஒரு கதாநாயகி சாய் பல்லவி தமிழில் அதற்கு முன்பே தாம் தூம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தியா என்ற படத்தின் மூலம் தமிழுக்கு ஹீரோயினாக அறிமுகம் ஆனார் அதன் பின் தனுஷின் மாரி, சூர்யாவின் NGK படங்களில் நடித்து இருந்தார்.
தற்பொழுது சிவகார்த்திகேயன் அவர்களது 21 வது படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி.
சாய்பல்லவி திடீர் திருமணம் என்றும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை சாய் பல்லவி திருமணம் செய்து கொண்டதாக செய்தி பரவியது. அதுமட்டும் அல்லாமல் திருமண கோலத்தில் மாலையுடன்இருப்பது போன்றும் புகைப்படங்கள் இணையத்தில் உள்ள வந்தது.
சமீபத்தில் படக்குழுவினர் சிலர் அந்த புகைப்படம் சிவகார்த்திகேயனின் 21 வது பட பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் சாய்பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதாகவும், மேலும் ராஜ்குமார் பெரியசாமி அந்த படத்தை இயக்குவதாகவும் தெரிவித்த பிறகே சாய்பல்லவி திருமண செய்தி வதந்தி என்று உறுதிப்படுத்தப்பட்டது.
சிவகார்த்திகேயனின் 21 வது படத்தை இயக்கும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தவறுதலாக திருமண புகைப்படம் என்று ரசிகர் யாரோ எடிட் பண்ணி பதிவிட்டு உள்ளார் என்றும் உறுதி செய்யப்பட்டது.