Monday, May 6, 2024
-- Advertisement--

விஜயின் பிறந்த நாளையொட்டி தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்க்கு கொடுத்த சர்ப்ரைஸ் கிபிட் …!!! என்னனு தெரியுமா.

விஜய் பிறந்த நாளையொட்டி நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 பீஸ்ட் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து இரவு 12 மணி அளவில் தளபதி 65 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் படக்குழு வெளியிட்டது. இன்று விஜயின் பிறந்த நாளையொட்டி திரையுலகினர் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் என்ன பொறுத்தவரை ரொம்ப ஸ்பெஷலான பிறந்த நாள் என்று நினைக்கிறேன். இன்று விஜயின் 47 வது பிறந்த நாள் அதேபோல் இந்தியாவுக்கு சுதந்திர கிடைத்த வருடமும் 47 .

ஆனால் பொதுவாகவே விஜய்யும் நானும் பெரிதாக பிறந்தநாள் கொண்டாடுவது இல்லை. எப்பொழுதும் ஆயிரக்கணக்கான மக்களை சந்தோஷப்படுத்துவது தான் உண்மையான பிறந்தநாள். ஏழை மக்களுக்கு ரத்த தானம், அன்னதானம், கல்விக்கான உதவி போன்ற உதவிகளை செய்வதையே பிறந்த நாளாக நினைத்துக் கொள்வோம். அதேபோல் இந்த பிறந்தநாளில் முக்கியமான அறிவிப்பினை ஒன்றை கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இந்த விஷயம் ரொம்ப நாட்களாகவே மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு இந்திய மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்காங்களா? தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கா? ஒரு தாய் தனியா இருக்க முடியுதா? ஒரு குழந்தை தனியா விளையாடிட்டு வீட்டுக்கு வர முடியுதா? போன்றவற்றை எண்ணி ரொம்ப காலமா நினைச்சுட்டு இருக்கேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பாதுகாப்பு கிடைக்க வேண்டியது ரொம்ப முக்கியம். அதுக்காக எல்லா வீட்டிலும் சிசிடிவி கேமரா இருந்தாலே குற்றங்கள் குறைக்க முடியும். அதேபோல் யாராவது திருடன் வந்து விடுவான் என்ற பயத்திலேயே மக்கள் வாழ்கிறார்கள். எனவே சிசிடிவி இருந்தால் திருட வருபவர்களுக்கு ஒரு பயம் இருக்கும். ஆனால் ஏழை மக்களுக்கு சிசிடிவி பொருத்தும் அளவிற்கு வசதி இல்லை. அதனால் ஒரு மாவட்டத்திற்கு மீதம் 10 ஆயிரம் வீட்டுக்கு குறைந்தது 10 ஆயிரம் சிசிடிவி கேமரா கொடுக்க நினைக்கிறேன். அதேபோல் நான்கு மாவட்டங்களில் எனது துபாய் நண்பர்களுடன் இணைந்து சிசிடிவி கேமரா கொடுக்க இருக்கிறேன். முதற்கட்டமாக வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் சிசிடிவி கேமரா சமூக உணர்வோடு கொடுக்க விரும்புகிறேன். மதுரை, கோவை என விரிவு படுத்த ஆசைப்படுகிறேன் இப்படி ஒரு பரிசு உன் பிறந்தநாளுக்கு கொடுக்க விரும்புகிறேன். இதைவிட எனக்கு வேற எந்த சந்தோஷமும் கிடையாது என்று வீடியோவில் பேசியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles