Thursday, May 9, 2024
-- Advertisement--

சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்பவர்களுக்கு ரூ.5000 பரிசு…!!! அதிரடி உத்தரவிட்ட தமிழக முதல்வர்.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கும் நபருக்கு ரூபாய் 5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை ஆணையர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.

பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு ரூபாய் 5000 பரிசாக வழங்கப்படும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசரகால உதவி இணை பொதுமக்கள் செய்யவேண்டும் என்பது ஆகும். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.

சாலை விபத்து நடந்த பின் காவல்துறையினர் அவ்விடத்தை பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பார். அனைத்து விபத்துகளும் மாவட்ட ஆட்சியர் எனது தலைமையின் கீழ் இயங்கும் மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்யும். இதில் தெரிவு செய்யப்படும் தேர்வுக்கு ரூபாய் 5000 பரிசு தொகை வழங்குவதற்கான போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

car crash accident on street, damaged automobiles after collision in city

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles