Wednesday, May 8, 2024
-- Advertisement--

RRR படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!! தளபதி விஜயின் BEAST ரிலீஸ் எப்போ? வெளியான தகவல்.

ராஜமௌலியின் RRR இந்த படத்தை உலக சினிமாவே பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது காரணம் ராஜமவுலி அவர்களின் முந்தைய படைப்பான பாகுபாலி உலகம் முழுவதும் பெரிய வசூலை அள்ளிக் குவித்தது. தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் ஒரு திரைப்படம் பெரிய வசூலை செய்ய முடியும் என்பதற்கு பெரிய உதாரணமாக ராஜமௌலியின் படைப்பு இருந்தது.

பாகுபலிக்கு பிறகு ராஜமவுலி அவர்கள் அடுத்த திரைப்படத்தை எதிர்ப்பார்த்த வந்தார்கள் ரசிகர்கள் ராஜமௌலி தெலுங்கில் ராம் சரண் ஜூனியர் என்டிஆர் அவர்களை வைத்து RRR என்ற படத்தை எடுத்து முடித்து ஜனவரி 7ஆம் தேதி ரிலீஸ் செய்யவும் இருந்தார்.

படம் ஜனவரி மாதம் வெளியாகிறது என்ற செய்தி வந்த உடனே முன் பல முன்னணி நடிகர்கள் தங்களது படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி வைத்தார்கள் அந்த அளவிற்கு பெரிய படமாக அமைந்தது படம் நடித்து முடித்து விட்டோம் என்றில்லாமல் படத்தின் பிரமோஷன்க்கு அந்த படத்தில் நடித்த ஹீரோ ராம் சரண் ஜூனியர் என்டிஆர் இருவரும் ஒத்துழைத்து ராஜமவுலியுடன் பல இடங்கள் சென்று படத்தை பிசினஸ் செய்தார்கள் எதிர்பார்த்ததைவிட பெரிய அளவில் படமும் வசூல் செய்துள்ளது.

திரையில் RRR படத்தை காண ஆவலோடு ரசிகர்கள் இருந்த நேரத்தில் திடீர் எனறு படக்குழுவினர் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில் திரைப்படம் தற்போது வெளியாகாது ஜனவரி வெளியீடு இல்லை. கொரோனா பரவல் அதிகமாகி கொண்டிருப்பதால் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த அரசு தியேட்டரில் படம் பார்க்க சில கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததும் 50% கையுடன் திரையரங்கு இயங்கும் இந்த அறிவிப்பு படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்காமலேயே படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தார்கள் படக்குழுவினர்.

தற்பொழுது RRR படத்தை வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் இதனால் செம குஷியில் சினிமா ரசிகர்கள் இருக்கின்றனர். தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படமும் ஏப்ரல் மாதத்தில் வர இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக ஏப்ரல் மாதம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயின் beast ஏப்ரல் மாதத்தில் வெளியிட வேண்டும் என்று விஜய் தரப்பு உறுதியுடன் உள்ளார்கள். அதற்கான பணிகளும் நடந்து கொண்டு இருக்கிறது. வேற எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தால் விஜயின் பீஸ்ட் கரெக்ட்டா வரும் என தகவல்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles