விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளி திரையை தனது பயணத்தை தொடங்கினார்.
வெள்ளி திரையில் காமெடி நடிகராக வலம் வர தொடங்கினார். தற்போது முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவரது மகள் இந்திரஜாவும் தற்போது சினிமாவில் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.
இவருடைய முதல் படமே விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்கிற கேரக்டரில் நடித்து இருந்தார். இதையடுத்து கார்த்தி – அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன விருமன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து இந்திரஜாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இருவரும் படு பிஸியாக சினிமாவில் நடித்து வருகிறார்கள். இந்திரஜா சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
ரோபோ சங்கருக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டது என சீரியல் நடிகரும் அவரின் நண்பருமான போஸ் வெங்கட் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
தற்போது நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தமிழ் புத்தாண்டு தினத்தில் அப்பாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
எப்போதும் குண்டாகவே இருக்கும் ரோபோ சங்கர் தற்போது உடல் மெலிந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறி உள்ளார்.ரோபோ ஷங்கரின் மனைவியும் உடல் மெலிந்து காணப்படுகிறார். இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.