ரித்திகா சிங் தமிழில் அறிமுகமான முதல் படம் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த “இறுதிச்சுற்று” என்ற படத்தில் அருமையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே குத்துச்சண்டை வீரராக நடித்த ரித்திகா. நல்ல ஸ்கோப் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின் விஜய் சேதுபதியின் “ஆண்டவன் கட்டளை” என்ற படத்தில் நடித்திருந்தார். பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்த “சிவலிங்கா” படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற “ஓ மை கடவுளே” என்ற படத்தில் அசோக் செல்வனின் ஜோடியாக நடித்திருந்தார் . அந்தப் படத்தில் இவருடைய கதாபாத்திரம் நன்றாக இருந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்தது.
இதையும் படிங்க : பிரபல நடிகை ரீமாசென்னின் கணவர் இவரா…!!! இணையத்தில் வைரல் ஆகும் திருமண புகைப்படங்கள்..
தற்போது ஓய்வு நேரத்தில் வீட்டில் இருக்கும் மிருத்திகா என்ன வேலை செய்துள்ளார் என்று நீங்களே பாருங்களேன். ரித்திகா வின் தாயார் ரித்திகா துணி துவைக்க சொல்லியிருக்கிறார் அதற்கு ரித்திகா ஒரு டீ சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு அந்தத் துணியை கும்மு கும்முனு கும்முகிறார்.