Friday, May 3, 2024
-- Advertisement--

ரிஷப ராசி : ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2023 -2024..!!! பரிகாரங்கள் விவரம் ..!!!

சாந்தமான குணம் இருந்தாலும் கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாத இயல்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள்வரை 6, 12-ல் சஞ்சரித்த ராகு- கேது தற்போது ஏற்பட உள்ள இடபெயர்ச்சியால் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 30-10-2023 முதல் 18-5-2025 வரை (வாக்கியப்படி 8-10-2023 முதல் 26-4-2025 வரை) ராகு ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிலும், கேது பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள் சூழ்நிலைக்கு தக்கவாறு சிறப்பாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.

குரு சனி சாதகமற்று இருந்தாலும், ராகு லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் நெருக்கடியான நேரத்தில்கூட எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு உங்கள் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பண பரிமாற்ற விஷயங்களில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

கேது உங்கள் ராசிக்கு 5-ல் இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் தான் ஏற்படக்கூடிய சிறுசிறு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கமுடியும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது, பங்காளி யிடம் பேசுகின்ற போது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. பூர்வீகச் சொத்துரீதியாக உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடு கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது மிகவும் நல்லது.

கணவன் மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும் என்றாலும் பிள்ளைகள் வழியில் தேவையற்ற நிம்மதி குறைவு ஏற்படலாம் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவது, தொழில், வியாபாரத்தில் எந்தவித நெருக்கடியும் எதிர்கொள்ளக்கூடிய திறன், போட்டிகள் இருந்தாலும் அதனை சமாளித்து அடையவேண்டிய லாபத்தை அடையக்கூடிய பலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்து முடிக்கமுடியும். ஆண்டுகோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு வரும் 1-5-2024 முடிய விரைய ஸ்தானத்திலும், அதன்பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் நினைக்கும் காரியங்களில் சற்று கவனத்தோடு ஈடுபடுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ளவேண்டும்.

அசையும், அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். ஒரு சிலருக்கு தேவையில்லாத பயணங்கள் உண்டாகும். 1-5-2024 முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்கின்றபொழுது தனது சிறப்பு பார்வையாக 5, 7, 9-ஆம் வீடுகளை பார்க்கும் என்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகளால் சில ஆதாயங்களை அடையமுடியும். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பிள்ளைகள் வழியில் இருக்கக்கூடிய தேவையற்ற கவலைகள் எல்லாம் விலகி சுமூகமான நிலை உண்டாகும். வெளியூர் தொடர்புகளால் ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனி இக்காலங்களில் 10-ல் சஞ்சரிப்பதால் எந்த ஒரு காரியத்திலும் யோசித்து செயல்படுவது, தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது தொழில் தொடர்பான கணக்கு, வழக்குகளைகூட சரிவர பராமரித்துக் கொள்வது மிகவும் சிறப்பு. தற்போது உங்களுக்கு கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் தவறவிடாமல் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை நீங்கள் அடையமுடியும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் சொல்படி நடந்து கொண்டால் ஒரு உயர்வான நிலையினை எட்ட முடியும். பிறர்
சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பி இருக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 8 நிறம்: வெண்மை, நீலம் கிழமை: வெள்ளி, சனி கல் வைரம் திசை: தென்கிழக்கு தெய்வம் விஷ்ணு, லட்சுமி,

பரிகாரம்:
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5-ல் கேது சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது. உங்களுக்கு குரு பகவான் சாதகமின்ற சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள்நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும் 5 முக ருத்ராட்சம் அணிவதும், குரு எந்திரம் வைத்து வழிபடுவதும் நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும். உங்களுக்கு சனி 10-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியை வழிபடுவதாலும், அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறை
யும். சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபமேற்றுவது) சனிபகவானுக்கு கருப்புநிற வஸ்திரம் சாற்றுவது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யவும்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles