Friday, May 17, 2024
-- Advertisement--

விரைவில் தாயாகும் ஒஸ்தி நடிகை ரிச்சா..!!! அவரே வெளியிட்ட கியூட் புகைப்படம்..!!!

ரிச்சா லீடர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் பார்க்க கனகச்சிதமாக இருப்பதால் தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தெலுங்கில் வந்தது.

செல்வராகவன் இயக்கத்தில் தமிழில் மயக்கம் என்ன படத்தில் யாமினி என்ற கதாபாத்திரத்தில் தைரியமான பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார்.

தனுஷுக்கு ஜோடியாக நடித்த ரிச்சா அதனைத்தொடர்ந்து ஒஸ்தி என்ற படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அம்மணி தெலுங்கில் காட்டிய தாராளத்தை பார்த்து அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்கும்படி தயாரிப்பாளர்கள் தரப்பில் கொஞ்சம் அழுத்தம் கொடுக்கப்பட்டதாம்.

அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்த ரிச்சா தனது மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தார். 2019ஆம் ஆண்டு ஜோ என்ற வெளிநாட்டினரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ரிச்சா தனது காதல் கணவருடன் அமெரிக்காவில் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.

சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சமூக வலைதளம் மூலம் தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஜூன் மாதத்தில் குழந்தை பிறக்க இருக்கிறது என்று அவரே தெரிவித்து இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை விட்டு ரிச்சா விலகி இருந்தாலும் அவரது ரசிகர்கள் என்றும் அவரை மறக்காமல் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles