சென்னை தாம்பரம் அருகில் உள்ள மாடம்பாக்கம் என்ற ஏரியாவில் வசித்து வரும் 25 வயது இளம் பெண்ணுக்கும் பெரம்பூரில் வசிக்கும் பாலாஜி என்பவருக்கும் facebook மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் சேலையூரில் உள்ள சட்ட கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் பாலாஜிக்கும் இடையே இருந்த நட்பு நாளைடைவில் காதலாக மாறியது. கல்லூரிக்கு செல்வதாக தனது வீட்டில் சொல்லிவிட்டு இருவரும் பார்க் மற்றும் பீச் என்று ஆரம்பத்தில் சுற்றி திரிந்து இருக்கிறார்கள். அதன் பின் பாலாஜி நன் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆசை வார்த்தை கூறி லாட்ஜ் ஒன்றில் அந்த பெண்ணுடன் தன் ஆசை தீர உல்லாசமாக இருந்து அனுபவித்து இருக்கிறார் பாலாஜி. பலமுறை உல்லாசம் கொண்டதால் அந்த பெண் கர்ப்பம் ஆனார். தான் கர்ப்பம் அடைந்ததை தனது காதலனுக்கு அறிவித்து உள்ளார். திருமணம் செய்து கொள்ளுமாறு பாலாஜியிடம் கேட்டுள்ளார். அதற்கு பாலாஜி இந்த நிலையில் நாம் திருமணம் செய்து கொண்டால் அக்கம் பக்கத்தினர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆனவள் என்று நம்மை பேசுவார்கள் என் வீட்டிலையும் நான் அனுமதி வாங்க வேண்டும் என்றால் அந்த கருவை கலைக்குமாறு கூறியுள்ளார்.
காதலன் சொன்ன உடன் ஒரு தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்தார். அதன் பின் திடீரென்று பாலாஜி எனது வீட்டில் நமது காதலை ஏற்கவில்லை நாம் பிரிந்துவிடுவோம் என்று கூறியுள்ளார். இதனை கெட அந்த பெண் பதறி போனார். திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சி உள்ளார். இதனால் அதிர்க்ம் அடைந்த காதலன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார் பாலாஜி.உடனே அந்த பெண் என்ன செய்வது என்று அறியாமல் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
முகம் தெரிந்தவர்களே நம்மை ஏமாற்றும் பொழுது யாரோ முகம் தெரியாத நபரை சமூகவலைத்தளத்தில் மூலம் நம்புவது தவறு.