Saturday, May 4, 2024
-- Advertisement--

வருங்கால கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா காரணம் இது தானம்..!!! விரைவில் நயனுக்கு டூம் டூம் டூம்.

பிரபல நடிகை நயன்தாரா நானும் ரவுடி தான் என்ற படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வந்தார் அந்த படத்தின் சூட்டிங் போது விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. ஏற்கனவே நயன்தாரா சிம்பு பிரபுதேவா என்று இரண்டு காதல் தோல்விகளை கடந்து வந்தவர்.

தம் மீது அக்கறை கொள்ளும் அனைவரையும் உடனே ஏற்றுக் கொள்வதால் தான் இது போன்ற காதல் முடிவுகள் வருகிறது அதனால் விக்னேஷ் விஷயத்தில் கொஞ்சம் பொறுமையாக இருப்போம் என்று நினைத்தாரோ என்னமோ விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வெளிநாடுகள் செல்வது, பார்ட்டிகளில் கலந்து கொள்வது, நயன்தாரா செல்லும் ஷூட்டிங்குக்கு உடனே சிவன் செல்வது என்று பொழுதை கழித்து வந்தார்கள்.

விக்னேஷ் சிவனின் அம்மாவின் பிறந்தநாளுக்கு நயன்தாராவை விக்னேஷ் சிவன் வீட்டிற்கு அழைத்து செல்வது என்று திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

திருமணம் செய்யும் முன் சில நெருங்கிய நபர்களிடம் அறிவுரைக் கேட்டு பல ஸ்தலங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர். சில கோவில்களில் சிறப்பு பூஜையும் நடத்தினார். சமீபத்தில் தான் விக்னேஷ் சிவன் நயன்தாரா நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது விக்னேஷ் சிவன் அன்புப் பரிசாக அளித்த நிச்சயதார்த்த மோதிரத்தை நயன்தாரா கையில் போட்டுள்ளார்.

விரைவில் இருவர் திருமணமும் நடக்க இருக்க அதன் முன் சூட்டிங் இல்லாத நேரத்தில் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார்கள் நயன்தாராவும் விக்கியும்.

நேற்று நயன்தாரா மற்றும் அவரது வருங்கால கணவர் விக்கி இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தனர் அப்பொழுது வெளியே நின்ற பக்தர்கள் நயன்தாராவை கண்டதும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாரா மற்றும் அவரது வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு முன்பு சில கோவில்கள் சென்று வழிபட முடிவு செய்து உள்ளார்களாம். அந்த கோவில்களுக்கு சென்று வழிபாடுகள் முடிந்த பின் திருமண தேதி குறிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா வீடியோ இதோ

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles