Sunday, April 28, 2024
-- Advertisement--

வயசானாலும் உங்க ஸ்டையிலும் அழகும் கொஞ்சம் கூட மாறல ரம்யா மேடம்…!!! ரம்யாகிருஷ்ணனின் புகைப்படத்தை வர்ணித்த ரசிகர்கள்.

ரம்யா கிருஷ்ணன் வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் 14 வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கிய ரம்யா தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆட்டமா தேரோட்டமா பாடலில் ஆடி அசத்தியிருந்தார்.

படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார். குறிப்பாக ரஜினியை காதலிப்பதும் ரஜினி விரும்பவில்லை என்று தெரிந்தும் ரஜினியை அடைய முயற்சி செய்வதும் என்று தனது நடிப்பால் மிரள வைத்தார் ரம்யா. இன்றும் ரம்யா கிருஷ்ணன் போல் படையப்பா படத்தில் வில்லியாக நடிகைகள் எவரும் இல்லை என்று சொல்லுமளவிற்கு பெயர் பெற்றார்.

வில்லி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் கமல்ஹாசன் படமான பஞ்சதந்திரம் படத்தில் மேகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணனுக்கு படையப்பாக்கு பிறகு பெயர் சொல்லும் படமாக அமைந்தது பாகுபலி திரைப்படம் தான். ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம் ரம்யா கிருஷ்ணனுக்கு மீண்டும் ஒரு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. ராஜ மாதாவாக நடித்திருந்த ரம்யா. சமீபத்தில் கூட SUPER DELUXE படத்தில் மார்க்கமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார். ரம்யாகிருஷ்ணன் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கா வயது 51 நம்பவே முடியலையே இவருடைய டயலாக் இவருக்கு தான் பொருந்தும் வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் கொஞ்சம் கூட மாறால மேடம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles