Monday, May 20, 2024
-- Advertisement--

கருப்பு நிற உடையில் ஐயப்பன் மாலையை போட்டு கெத்தாக ஆஸ்கருக்கு கிளம்பிய ராம்சரண்…!! வைரலாகும் போட்டோ ..

தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோ ராம்சரண். இவர் கடந்த ஆண்டு மாபெரும் இயக்குனர் ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் ராம்சரனும், ஜூனியர் என்டிஆர் கதாநாயகர்களாக நடித்து இருந்தனர்.

இந்த கதை சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராமன் ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் நட்பையும் மையமாக வைத்து படம் முழுவதும் எடுக்கப்பட்டது.

இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் பெற்று பாக்ஸ் ஆபிஸில் பெரிய வரலாற்றைப் பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு ராம் சரணுக்கும், ஜூனியர் என்டிஆர் க்கும் இன்னும் அதிக ரசிகர்கள் உலக அளவில் கிடைத்துள்ளனர். படம் வெளியாகி ஒரு ஆண்டு முடிந்துவிட்ட பொழுதும் அந்த படத்திற்கான வரவேற்பு இன்னும் குறையவில்லை.

உலகம் முழுதும் நடந்த பல விருது விழாக்களில் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பல விருதுகள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த மாதம் இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு என்ற பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை இந்த படத்தின் இசை அமைப்பாளர் கீரவாணி வென்றார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து இந்தியர்களுக்கும் மிகப்பெரும் கனவாக இருப்பது ஆஸ்கர் விருது. அதேபோல் இந்த வருடமும் ஆஸ்கர் விருது நடைபெற உள்ளது. அதில் நாட்டு நாட்டு பாடல் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதனால் ஆர்.ஆர்.ஆர் பட குழு ஒரு ஒருவராக அமெரிக்க பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் ஆர் .ஆர். ஆர் படத்தின் கதாநாயகன் ராம் சரண் ஐயப்பனுக்கு மாலை போட்ட நிலையிலும் கருப்பு பேண்ட் கருப்பு சட்டை அணிந்து ஐயப்பன் மாலையுடன் நேற்று விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles