Friday, May 3, 2024
-- Advertisement--

ரஜினி நெல்சன் படம் நடக்குமா…!!! பீஸ்ட் படத்தை பார்த்த ரஜினி என்ன செய்துள்ளார் தெரியுமா…!!!

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று திரைக்கு வந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் திரையிட்ட இரண்டு நாட்களில் 100 கோடியை கடந்து வசூலை அள்ளிய தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று சன் டிவி அலுவலகத்திற்கு சென்று நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை பார்த்துள்ளார்.

படத்தைப் பார்த்த ரஜினி நெல்சனை கட்டிப்பிடித்து சபாஷ் என்று பாராட்டியதாக தகவல்கள் வெளிவந்தது. இருந்தாலும் ரஜினியுடன் படம் பார்த்தவர்கள் சிலர் ரஜினி படம் பார்க்கும்போது அவரது முகத்தில் பதற்றம் தெரிந்ததாகவும் ஒரு மரியாதைக்காக நெல்சனை கட்டி பிடித்து நன்றாக படம் உள்ளது என்று கூறி விட்டு சென்றது போல் இருந்ததாகவும் கூறி வருகிறார்கள் சினி வட்டாரத்தினர்.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு சரியான படம் அமையாததால் அவருடைய ரசிகர்கள் சற்று அப்செட்டில் இருக்க விஜய்யின் படத்தை இயக்கும் இயக்குனர் அடுத்து தலைவரை வைத்து படம் எடுக்க போகிறார் படம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள் ரஜினி ரசிகர்கள். அதுமட்டுமல்லாமல் ரஜினி சார் கதை கேட்கிறார் நெல்சா நல்ல கதை ஒன்னு ரெடி பண்ணி ரஜினி சாரிடம் சொல்லுங்கள் என்று சொல்லியதே விஜய் தான்.

தற்போது வந்த தகவலின் படி பீஸ்ட் படத்தை பார்த்த பின்பு ரஜினி தரப்பு விஜய் நம்பி கொடுத்த வாய்ப்பை சொதப்பியது போல ரஜினி படத்தையும் சொதப்பி விடுவாரோ என்ற பயத்தில் இருக்கிறார்களாம்.

ரஜினியுடன் நெல்சன் இணையும் அடுத்த படம் நடக்குமா என்கின்ற அளவிற்கு சினிமா வட்டாரத்தில் பேசத் தொடங்கிவிட்டனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles