Vijay VS Rajini இந்த டாபிக் தான் கோலிவுடை தற்போது உலுக்கி கொண்டிருக்கிறது காரணம் விஜய்யா ரஜினியா என்ற போர் தான் ரசிகர்களிடம் நிலவி வருகிறது. விஜயின் பிசினஸ், தொடர் வெற்றிகள், விஜய் படத்தின் வசூல் அனைத்தையும் வைத்து பார்க்கையில் விஜய் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேச தொடங்கினார்கள் சினி வட்டாரத்தில்.
ஆனால் நான் தான் சூப்பர் ஸ்டார் என்று ஒருபோதும் விஜய் சொன்னதே இல்லை அதேபோல பல இடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மட்டும் தான் என்று ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளார் இந்நிலையில் சில மாதங்களாக யார் சூப்பர் ஸ்டார் என்ற விவாதம் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாத மேடைகளில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
விஜய் சூப்பர்ஸ்டார் படத்தை விருப்பியது இல்லை:
சமீபத்தில் இது பற்றி இயக்குனர் பேரரசிடம் பத்திரிக்கையாளர் கேட்டதற்கு யார் சூப்பர் ஸ்டார் என்ற போட்டி முதலில் எதற்கு? சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான் அதுபோல தளபதி விஜய் அவர்கள் தான். விஜய் சாரும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்டதில்லை அவரே பல இடங்களில் ரஜினி சார் தான் ஒரே சூப்பர் ஸ்டார் என்று கூறியிருக்கிறார்.விஜய் பற்றி ரஜினி சாரும் பெருந்தன்மையோடு தான் பேசி இருக்கிறார். அப்படி இருக்கையில் சிலர் இதுபோன்ற தேவையில்லாத செயலில் ஈடுபட்டு வருகின்றனர் இது விஜய் சாருக்கும் மனசுக்கு சங்கடமாக இருக்கும் ரஜினி சாருக்கும் பெரிய சங்கடமாக இருக்கும்.
MGR பட்டத்திற்கு ரஜினி ஆசைப்படவில்லை:
எம் ஜி ஆர் அவர்கள் புரட்சித் தலைவர் புரட்சித்தலகம் பட்டத்தை ரஜினிகாந்த் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை எம்ஜிஆருக்கு பிறகு ரஜினிகாந்த் அவருடைய பட்டத்தை வாங்கவும் ஆசை இல்லை எம் ஜி ஆர் எப்போது அரசியல் போனாரோ அதன்பின் ரஜினி அவர்கள் சூப்பர் ஸ்டாராக நம்பர் ஒன் இடத்தில் சினிமாவில் இருந்து வந்தார்.
தளபதி பட்டத்தை மறுத்த விஜய்:
தளபதி விஜய் அவர்களை வைத்து நான் திருப்பாச்சி சிவகாசி என இரு படங்கள் இயக்கி உள்ளேன். நான் சிவகாசி படத்தின் ரிலீஸ் நேரத்தில் படத்தின் டைட்டில் கார்டில் இளைய தளபதி என்று போட வேண்டாம் புரட்சித்தளபதி என்று போட்டுக் கொள்ளலாம் அல்லது தளபதி என்று போட்டுக் கொள்ளலாம் என்று விஜய் சாரிடம் அனுமதி கேட்டேன் இது பற்றி என் அப்பாவிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று என்னை அனுப்பி வைத்தார்.
SAC அவர்கள் இது பற்றி யோசித்து விட்டு தளபதி என்பது ஸ்டாலின் அவர்களை குறிக்கும் சொல்லாக இருக்கிறது அவர்கள் ஏதும் தவறாக எடுத்துப் பாருங்கள் எடுத்துக்கப்போறாங்க அதனால் இளையதளபதி இருக்கட்டும் என்று SAC கூறினார். விஜய் அவர்களும் இளையதளபதி இருக்கட்டும் என்று கூறினார்.
இப்போது தளபதி என்று பெயர் வைக்க விஜய் அனுமதித்திற்கு காரணம் மு க ஸ்டாலின் அவர்கள் தளபதியை தாண்டி தற்பொழுது தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார். இப்போது தளபதி என்ற பெயரை பயன்படுத்தினால் தவறாக இருக்காது என்று பலர் கூறிய பிறகு விஜய் ஒப்புக்கொண்டார் என்ற தகவலையும் கூறினார்.
ரஜினி விஜய்குள் எந்த பிரச்சனையும் இல்லை:
அதுபோல விஜய் ரஜினி அவர்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அவர்கள் அவர்கள் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் எதற்கு ரசிகர்கள் சண்டை என்று கேள்வி எழுப்பிவிட்டு சென்றார் பேரரசு.