Wednesday, May 22, 2024
-- Advertisement--

மறைமுகமாக இல்லை நேரடியாகவே அரசை எச்சரித்த ரஜினி…!!! ரஜினியின் அதிரடி ட்வீட்.

கொரோனா ஊரடங்கினை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது இந்திய அரசு. நமது பாதுகாப்பிற்காக இரு மாதங்கள் வீட்டிலையே இருக்கும் படி அறிவுறுத்திய அரசு தற்பொழுது மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதை உணர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதி கொடுத்தது அரசு. அதன் படி தற்பொழுது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கடைகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது . ஒரு சில இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை கண்டித்து போராட்டம் செய்து அதனை மூடினார்கள். அதன் பிறகு சென்னை உயர் நீதி மன்றத்தில் டஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என்று உத்தரவு வந்ததது.

இதையும் படிங்க: ஆளே இல்லாமல் காலியாக ஓடிய விஜய் படம்..!!! விஜய் படத்திற்கு வந்த நிலைமை..

தற்பொழுது டாஸ்மாக் எதிராக ரஜினி குரல் கொடுத்துள்ளார். “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்” என்று ட்வீட் செய்து இருந்தார். சமூக பிரச்சனை சிலவற்றில் அமைதி காத்த ரஜினி டாஸ்மாக் விவகாரத்திற்கு குரல் கொடுத்து உள்ளார் இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles