Thursday, May 9, 2024
-- Advertisement--

ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் பின் வாங்கிய RRR ..!!! வலிமை நிலைமை இது தான் வெளிவந்த தகவல்.

ராஜமௌலியின் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்த படம் தான் RRR. இந்த படத்தை சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். காரணம் ராஜமௌலியின் முந்தைய படைப்பான பாகுபலி இந்திய அளவில் பெரிய வசூலை அள்ளிக் குவித்தது மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பெரிய வசூல் செய்தது.

இந்தப் படம் பாகுபலி போல் இருக்காது இது முற்றிலும் மாறுபட்ட கதை என்று ஏற்கனவே ராஜமௌலி அவர்கள் அறிவித்துவிட்டார். வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

என்ன தான் படத்தை பிரம்மாண்டமாக எடுத்தாலும் நேரம் என்ற ஒன்று உள்ளது. பல கோடிகள் போட்டு எடுத்த RRR படம் வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி ரிலீஸாக இருந்தது அதற்கான பிரமோஷன் வேலையை சரியாக செய்து வந்தார்கள் படத்தை இயக்கிய ராஜமௌலி மற்றும் படத்தின் கதாநாயகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண்.

ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் நேரத்தில் திடீரென்று படக்குழுவினர் தரப்பில் இருந்து இந்த திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதியன்று திட்டமிட்டபடி திரைக்கு வராது என்று தெரிவித்துள்ளார்கள். அத்துடன் நமது இடைவிடாத முயற்சிகள் இருந்தபோதிலும், சில சூழ்நிலைகள் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. பல இந்திய மாநிலங்கள் திரையரங்குகளை மூடிக்கொண்டிருப்பதால், உங்கள் உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்திய சினிமாவின் பெருமையை மீண்டும் கொண்டு வருவோம் என்று உறுதியளித்தோம், சரியான நேரத்தில் நாங்கள் செய்வோம் என்று படக்குழுவினர்.

கொரோனா தொற்று எண்ணிக்கை முன்பை விட சற்று அதிகமாக உள்ளதாகவும் பூமி கொரோனா தாக்கம் அதிகமாக ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை காரணமாக இந்தியா முழுதும் பல தியேட்டர்கள் மூடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் RRR படம் வெளிவந்தால் படம் நன்றாக இருந்தாலும் போட்ட பணத்தையே கண்டிப்பாக எடுக்க முடியாது என்று கூறுகின்றனர்
சினிமா வட்டாரத்தினர்.

அது மட்டுமல்லாமல் சில திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் அனுமதி கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது இதனால் அந்த படத்தின் வசூல் பெரிய பாதிப்பினை சந்திக்கும் என்பதை உணர்ந்த படக்குழுவினர் தற்போது இந்த படத்தை ஜனவரி 7ஆம் தேதியன்று வெளியிடவில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

சினிமா ரசிகர்களால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட படம் ரிலீஸ் தேதி நெருங்கும் போது பின்வாங்கியது அனைவருக்கும் வருத்தத்தை அளித்தது மட்டுமல்லாமல் அதனை தொடர்ந்து சில நாட்களில் வெளியாக இருக்கும் வலிமை படத்தின் நிலை என்ன என்று அனைவரும் கேட்கத் தொடங்கி விட்டார்கள் குறிப்பாக அஜித் ரசிகர்கள் தல அஜித்தின் வலிமை படத்தை பெரிதாக எதிர்பார்த்து வருகின்றனர்.

வலிமை ரிலீஸ் கண்டிப்பாக பொங்கல் ரிலீஸ் தான் ஆனால் இன்னும் சில தினங்களில் தமிழக அரசின் கட்டுப்பாடுகள் பெரிதாக படத்திற்கு பாதிப்பு கொடுக்கவில்லை என்றால் கண்டிப்பாக சொன்ன தேதியில் வலிமை வரும் என்று உறுதியாக இருக்கிறார்கள் படக்குழுவினர் என்று தகவல்கள் வெளிவந்து உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles