ரகுல் ப்ரீத்தி சிங் தமிழ் சினிமாவில் “யுவன்” என்ற படத்தில் அறிமுகம் ஆகினர். அதன் பின் அருண் விஜயின் “தடையற காக்க” படத்தில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து ஒரு சில படங்கள் மட்டும் தமிழில் நடித்து வந்தார். யோவருக்கு தெலுங்குவில் பெரிய மார்க்கெட் இருந்ததால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தவர். தமிழில் மறுபடியும் கார்த்தியின்”தீரன் அதிகாரம் ஒன்று” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் “NGK ” படத்தில் நடித்தார். ஆனால் NGK படம் எதிர்பார்த்த அளவு இல்லாததால் சரியாக ஓடவில்லை. தற்பொழுது சிவகார்த்திகேயனின் “அயலான்” மற்றும் இந்தியன்-2 படங்களில் நடித்து வருகிறார்.
இந்தியாவில் கொரோனா தாக்குதலால் ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட கடைகள் மற்றும் திறக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் ஒரு வீடியோ வெளியானது அதில் ஒரு கடை ஒன்றுக்கு சென்று ரகுல் ப்ரீத்தி சிங்க் கைநிறைய பாட்டில்களை வாங்கி கொண்டு வருவது போல அந்த வீடியோ இருந்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ரகுல் ப்ரீத்தி சிங்க் மது பாட்டில்களை தான் வாங்கி சென்று உள்ளாரோ என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.
அந்த ட்விட்டை பார்த்த ரகுல் ப்ரீத்தி சிங்க் மெடிக்கல் ஷாப்பில் மது விற்பனை செய்கிறார்களா என்று பதிலடி கொடுத்தார் அந்த நபருக்கு.