Sunday, May 5, 2024
-- Advertisement--

பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் விஜய் டிவி புகழ்..!!! அப்புறம் என்ன புகழ் இனி கண்ணான கண்ணே தான்…!!!

    விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியில் முதலில் பங்கேற்பாளராக வந்து பின் அதே நிகழ்ச்சியில் கெஸ்ட் ஆக வந்தவர் புகழ் அவர்கள்.

    இவரது ஃபேமஸான ஒரு ஷோ என்றால் அது குக் வித் கோமாளி ஆகும். இவரது மிமிக்ரி மற்றும் காமெடிக்காகவே ரசிகர் பட்டாளம் உண்டு.

   இவர் விஜய் டிவியின் பல ஷோவில் தொகுப்பாளராக வந்துள்ளார். பின் பிஹைன்ட் வூட்ஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மணிமேகலை அவர்களுடன் வேலை பார்த்துள்ளார்.

Vijay tv cook with comali pugazh wedding photos

     இவரது காமெடிக்காகவே இவர் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த முதல் படம் “சிக்ஸர்” ஆகும். அதைத்தொடர்ந்து அவர் சபாபதி, வீட்ல விசேஷம், வலிமை, ஆகஸ்ட் 16 1947, கருங்காப்பியம் போன்ற படங்களில் நடித்தார்.

    மீண்டும் அவர் “குக் வித் கோமாளியில்” பல சீசன்களில் வந்துள்ளார். இவர் கடந்தாண்டு 2022-ல் பென்சி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

     பென்சி அவர்கள் கர்ப்பமாக இருந்த நிலையில் மேட்டர்னிட்டி போட்டோ சூட்  நடைபெற்றது.

     நேற்று பென்சி அவர்களுக்கு பிரசவம் நடந்து புகழ் அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது பெண் குழந்தையின் கால்களை போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருந்ததாவது, ஒருவன் தாயை இருமுறை காண வேண்டும் என்றால் மகள் இருந்தாலே போதும் என்று கூறியுள்ளார்.

       இவருக்கு குழந்தை பிறந்ததற்கு instagramல் பலரும் வாழ்த்தி உள்ளனர். அதில் சிவாங்கி, kpy பாலா, ஷெரின் அவர்களின் வாழ்த்துக்கள் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles