நாடெங்கும் கொரானோ வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல சுபநிகழ்ச்சிகள் இரண்டு மாத காலமாக நடைபெறவில்லை. சிலர் வீட்டிலேயே தன் குடும்பத்தினரை மட்டும் வைத்து கல்யாணம் சுபநிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.
அதுபோல சமீபத்தில் பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் ஆன தில் ராஜூ என்பவர் தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் ஆவார் இவர் பீடா, நேனு லோக்கல், யவடு, தில், சதமானம் பவதி, ஜானு போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். இதில் சதமானம் பவதி என்று படம் தேசிய விருது பெற்றுள்ளது.
இவருடைய முதல் மனைவி 2017 ஆம் ஆண்டு அகால மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் இவர் இரண்டாம் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது