Monday, May 20, 2024
-- Advertisement--

ஆச்சு அசல் கொரியன் பெண்ணை போல இருக்கும் இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா..!!! புகைப்படங்கள் உள்ளே.

பிரியா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லி அவர்களின் காதல் மனைவி. நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் அட்லிக்கு நெருங்கிய நண்பர் அதுபோல ப்ரியாவிற்கும் நண்பர்.

அட்லி மனைவி ப்ரியா திருமணத்திற்கு முன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பிரியாவும் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் தனது நண்பர் அட்லீக்கு பிரியாவை அறிமுகப்படுத்தியுள்ளார். முதல் சந்திப்பிலேயே பிரியாவும் அட்லீயும் நண்பர்களாக இருந்தனர். பிரியாவிற்கு வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்வதில் மும்முரமாக இருந்தனர் ஆனால் ப்ரியாவின் ஜாதகம் வருகின்ற மாப்பிள்ளை ஜாதகத்துடன் ஒத்துப் போகாததால் சற்று தாமதமாகிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் அட்லி நான் உன்னை காதலிக்கிறேன் என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார். அதன் பின் சில நாட்கள் யோசித்து விட்டு அட்லியின் காதலை பிரியா ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே நண்பராக இருக்கும் அட்லி தற்பொழுது வாழ்க்கை துணையாக வந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து பிரியா ஓகே சொன்னாராம்.

அதன் பின் இரு வீட்டாரும் ஒன்றுகூடி பேசி இவர்கள் திருமணம் நடந்தது. பிரியா டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாமல் ஒரு சில தமிழ் படங்களில் தலைகாட்டி வந்தார் குறிப்பாக சூர்யாவின் சிங்கம் படத்தில் அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்திருந்தார். கார்த்தியின் நான் மகான் அல்ல என்ற படத்தில் கார்த்தியின் தங்கையாகவும் நடித்து இருந்தார். ப்ரியாக்கு என்று தனி ரசிகர்கள் இன்று வரை இருக்கிறார்கள்.

ப்ரியா எந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டாலும் அதற்கு லைக் போட்டு தங்களது விருப்பத்தை பகிர்ந்து வந்த ரசிகர்கள் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து அட்லி ரொம்ப லக்கி பார்க்க பொம்மை மாதிரி கொரியன் பொண்ணு மாதிரி இருக்கீங்கன்னு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மையிலேயே அந்த புகைப்படங்களை பார்ப்பதற்கு ப்ரியா ஒரு பெண் போல தான் இருக்கிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles