உலகெங்கும் ஆட்டிப்படைத்து வரும் கொரானா இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. உலக அளவில் கொரானாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து தனது அன்றாட பிழைப்பிற்கு திண்டாடி வருகின்றனர். இந்த காலத்தில் ஊரடங்கு அறிவிப்பால் பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து தங்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் பிரசாத் போஸ்லே. இவர் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும்பொழுது பள்ளியிடம் சம்பளம் கேட்டுள்ளார் , அதன் காரணமாக இவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகின. தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பலருக்கும் இன்னும் சம்பள பாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தன் குடும்பத்தை காப்பாற்ற காய்கறி வியாபாரி ஆனது சிலருக்கு அதிர்ச்சியையும், சிலருக்கு நம்பிக்கையும் அளித்துள்ளது.