Saturday, May 4, 2024
-- Advertisement--

பிரதமர் மோடி அவர்களின் புதிய Mercedes-Maybach S650 காரில் இவ்வளவு வசதி இருக்கா..!!! 12 கோடினா சும்மாவா..!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்போது புதிதாக வாங்கியுள்ள Mercedes-Maybach S650 Guard கார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. Mercedes-Maybach S600 கார் 10 கோடியில் விற்பனை செய்யப்படுகிறது. தற்பொழுது மோடி அவர்கள் வைத்திருக்கும் கார் S 650.

பிரதமர் மோடி அவர்கள்ரேஞ்ச் ரோவர் வோக் மற்றும் டொயோட்டா லேண்ட் குரூஸரின் பயன்படுத்தி வருகிறார் இந்நிலையில் பிரதமர் அவர்கள் புதிதாக Mercedes-Maybach S650 என்கின்ற காரை 12 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த காரில் உள்ள சிறப்பு அம்சங்களைப் பற்றி பார்ப்போம் வாங்க.

இந்த கார் மிக உயர்ந்த அளவிலான கவச பாதுகாப்பை வழங்குகிறது மேம்படுத்தப்பட்ட ஜன்னல்கள் மற்றும் பாடி செல் காரணமாக தோட்டாக்களை தாங்கும் அளவிற்கு தரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏகே 47 துப்பாக்கி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரின் உட்புறத்தில் பாலிகார்பனேட் கோடிங் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

Mercedes-Maybach S650 கார் 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளார்கள் இந்த காரில் VR10 என்ற உயர்ரக பாதுகாப்பு அம்சம் உள்ளது. இதுவரை தயாரித்த காரிலேயே இந்த காருக்கு தான் அதிகம் பாதுகாப்புத் திறன் அம்சம் கொண்டுள்ளதாம். அதுபோல
2 மீட்டர் தொலைவில் 15 கிலோ TNT வெடிகுண்டு தாக்குதல் நடந்தால் கூட இந்தக் காரில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்கள் இந்தியா வந்திருந்த போது அவரை வரவேற்க பிரதமர் மோடி அவர்கள் Mercedes-Maybach S650 என்ற ரக காரில் வந்திருந்தார் .

பிரதமர் மோடி அவர்களின் பாதுகாப்பிற்காக இது போன்ற கார்கள் பாதுகாப்பு படையினர் ஆலோசனை படி வழங்கப்படுவதாக தகவல்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles