Sunday, May 19, 2024
-- Advertisement--

உடல் மெலிந்து.. வலியால் துடிக்கும் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்…!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹீரோவாக அறிமுகமானார். பவர் ஸ்டார் தானே தயாரித்து ஹீரோவாக நடித்து லத்திகா திரைப்படத்தை 365 நாட்கள் சில தியேட்டர்களில் ஓட வைத்தார். பெரிய ஹீரோக்களின் படங்களில் ஒரு மாதத்தில் தேர்தலை வைத்திருக்கும் இந்த நேரத்தில் யார் இவர் 365 நாள் இவருடைய படம் எப்படி ஓடுகிறது என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

தமிழ் சினிமாவில் தனக்கு போட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் என்று பேட்டி கொடுத்த பவர் ஸ்டாரின் அந்த வந்த பேச்சு சிரிப்பாக இருந்தாலும் இவருக்கு பெரிய பிரபலத்தை தேடிக் கொடுத்தது. ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் நடித்தார். சந்தானம் உடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் பவர்ஸ்டார் உடல்நலகுறைவால் திடீரென மருத்துவமனையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவமனையில் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் அவர் வலியும் வேதனையும் ஆக சிகிச்சை பெற்றும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்தார்.

அதன்பிறகு உடம்பை கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டதால் தற்போது திடீரென்று வலி எடுத்து நடக்க முடியாமல் போய்விட்டதாகவும் நான்கு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வீடியோவில் கூறியுள்ளார். இங்கே வந்தபிறகுதான் தண்டுவடத்தில் கிராக் ஆகிய விஷயம் தெரிய வந்துள்ளது. இதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். பவர்ஸ்டார் நாளை காலை டிஸ்சார்ஜ் போகப் போவதாகவும் அவரே வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் பவர் ஸ்டார் ரசிகர்கள் விரைவில் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles