கொரோனா தொற்று நாளுக்குநள் அதிகரித்து தினமும் தனக்கு நெருக்கமான சொந்தங்களை இழந்து தவிக்கிறார்கள் மக்கள்.
இந்நிலையில் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி நமது நாட்டுக்கே சரியாக விநியோகிக்கபடாத நிலையில் ஏன் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள் என்று பிரதமர் மோடியை கண்டித்து தலைநகர் டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் நம்முடைய குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யாதீர்கள் என்று பல கேள்விகளை எழுப்பி சுவரொட்டிகள் டெல்லியில் பல்வேறு முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.
நேற்று பெரும் பரபரப்பை டெல்லியில் கிளப்பிய இந்த போஸ்டர்களை யாருடைய தூண்டுதலால் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டது என்ற தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த போஸ்டர்கள் ஒட்டிய 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கைது செய்த அனைவரும் கூலிக்கு போஸ்டர் ஒட்டியவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.
இதன் பின்னணியில் இருப்பவர் யார் ஏன் இப்படி இவர்களை ஏவி போஸ்டர்கள் ஒட்ட வைக்கிறார்கள் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.