பல சீரியல் நடிகைகள் எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்று பல போட்டோ சூட்களை நடத்தி இணையத்தை சூடேற்றி வருகின்றனர். ஒரு சில சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா கிருஷ்ணன்.
இவர் வேலைக்காரன் சீரியலில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சன் டிவியில் அருவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
Instagramல் மிகவும் காமெடியான வீடியோக்களை வெளியிடுவது திவ்யா கிருஷ்ணனுக்கு பழக்கம். அது மட்டுமின்றி தினம் ஒரு திருக்குறள் என்ற வீடியோவையும் தினமும் வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாகவும் திவ்யா கிருஷ்ணனுக்கு பல ஃபாலோவர்ஸ் வருகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூட திவ்யா கிருஷ்ணனின் ஒருபோலவர்.
இந்நிலையில் சீரியல் நடிகை திவ்யா கிருஷ்ணன் மகா சிவராத்திரி அன்று அகோரி போல் வேடமிட்டு மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ மற்றும் போட்டோஷூட் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.