Friday, May 3, 2024
-- Advertisement--

விஜய்யின் 66வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது…!!! இந்த படத்திற்கு விஜய் வாங்கும் சம்பளம் எவ்ளோ தெரியுமா.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவர உள்ள திரைப்படம் பீஸ்ட் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி திரைப்படத்தை காண ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இது விஜயின் 65வது திரைப்படமாகும் இப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான விஜய் 66வது திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இன்று பூஜையை தொடர்ந்து பாடல் பதிவு செய்யும் பணிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.

நடிகர் கார்த்தி, நாகார்ஜுனா நடித்து வெளியான தோழா திரைப்படத்தின் இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தின் ஒரு பாடல் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் பாடல் காட்சியை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மேலும் விஜய் மற்றும் இசையமைப்பாளர் தமனின் புதிய கூட்டணியாக சேர்ந்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் திரைப்படம் படமாக்கப்பட உள்ளது.

இந்த படத்திற்காக நடிகர் விஜய் தமிழ் மொழிக்கு ரூ.80 கோடி சம்பளமும், தெலுங்கு மொழிக்கு ரூ. 40 கோடி சம்பளம் மொத்தம் 120 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற அந்தஸ்தை விஜய் பெற்றுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles