Friday, April 26, 2024
-- Advertisement--

விமானத்தில் பயணம் செய்த போது அவர் தவறாக நடந்து கொண்டார் பூஜா ஹெக்டே பகீர் குற்றச்சாட்டு…!!!

தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே முதல் படமே பெரிய தோல்வியை கண்டதால் பூஜாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தமிழில் கிடைப்பதில் சிக்கலாக இருந்தது அம்மணி தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் விழாவிற்கு தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு பெரிய அளவில் இருந்தது முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

அல்லு அர்ஜுனுடன் பூஜா ஹெக்டே புட்ட பொம்மா பாடலுக்கு போட்ட ஆட்டம் பட்டிதொட்டியெங்கும் பூஜாவை அடையாளப்படுத்தியது . தெலுங்குவில் வெளியான அந்த பாடல் தமிழ் ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது.

தளபதி விஜயின் BEAST படத்தில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு பூஜாவிற்கு கிடைத்தது தமிழில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்த பூஜா BEAST படத்தில் இடம் பெற்ற அரபி குத்து பாடல் மூலம் மீண்டும் மாபெரும் பிரபலத்தை அடைந்தார் குறிப்பாக அந்த பாடலில் பூஜா மற்றும் விஜயின் நடனம் பெரிய அளவில் பேசப்பட்டது. BEAST திரைப்படம் விஜய்க்கு பெரிய வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் பூஜாவிற்கு தமிழில் பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.

சமீபத்தில் பூஜா ஹெக்டே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மும்பையிலிருந்து புறப்படும் இன்டிகோ விமானத்தில் பயணித்தபோது விமானத்தில் பணிபுரிந்தவர் Vipul Nakashe என்பவர் திமிராக தன்னிடம் நடந்து கொண்டார் என்று குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளார் பூஜா. இது போன்ற பிரச்சனைகள் குறித்து நான் ட்வீட் செய்வதில்லை ஆனால் இது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார்.

பூஜா பதிவிட்டதை தொடர்ந்து அந்த விமானத்தில் பயணம் செய்த சிலர் அந்த ஊழியர் மீது குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles