தமிழில் பல வருடங்களுக்கு முன்பு நடிகர் ஜீவா நடித்த மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே.

இந்த படம் இவருக்கு பெரிய அளவுக்கு தமிழ் ரசிகர்களால் வரவேற்கப்படவில்லை. அதனால் தெலுங்கு பக்கம் திரும்பினார். தெலுங்கில் ஒரே ஒரு பாடல் மூலம் மிகவும் புகழ்பெற்ற நடிகை ஆனார் பூஜா ஹெக்டே.

அந்த பாடல் ” புட்ட பொம்மா” என்ற பாடல் தான். இந்த பாடலுக்கு பிறகு பூஜா விற்கு நிறைய பட வாய்ப்புகள் அனைத்து மொழிகளிலும் வந்தன. தமிழில் முகமூடிக்கு பிறகு நீண்ட தளபதி விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார் பூஜா . இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுவது வழக்கம்.

அதுபோல சமீபத்தில் கண் கூசும் அளவிற்கு ஜொலிக்கும் உடை ஒன்றை அணிந்து எக்கச்சக்க போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.
