Monday, May 6, 2024
-- Advertisement--

துணி அணியாமல் புகைப்படம் அனுப்புங்க நடிகையிடம் ரசிகர் கேட்ட கேள்வி..!!! பதிலடி கொடுத்த நடிகை பூஜா.

பூஜா ஹெச் முகமூடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அது ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அந்த படத்திற்கு இருந்தது ஆனால் அந்த படம் பெரிதாக ஓடாததால் பூஜாவிற்கு அடுத்தடுத்த படங்கள் தமிழில் அமைவது கடினமாய் இருந்தது அதே நேரத்தில் தெலுங்கு படங்களில் இவருக்கு நடிக்க அதிக அளவில் வாய்ப்புகள் வந்து குவிந்தது. தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய பூஜா தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு பூஜா ஹெச் தீவிர ரசிகர் ஒருவர் எப்படியாவது இவரை சந்தித்து விட வேண்டும் என்று மூன்று நாட்களாக பிளாட்பார்மில் படுத்து உறங்கி இருக்கிறார். கடைசிவரை பூஜாவை பார்க்க முடியாமல் தவித்த ரசிகர் பற்றி அறிந்துகொண்ட பூஜா ஜிம்முக்கு செல்லும் போது அந்த ரசிகரை சந்தித்து என்னை சந்திப்பதற்காக வந்ததற்கு நன்றி என் மீது இவ்வளவு அன்பு கொண்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது. அதே நேரத்தில் நீங்கள் எனக்காக மூன்று நாட்கள் பிளாட்பார்மில் தங்கியிருந்தது வேதனை அளிக்கிறது இதுபோல் செய்யாதீர்கள் என்று அன்புக் கோரிக்கை வைத்து வழியனுப்பி வைத்தார் பூஜா.

சமீபத்தில் புட்ட பொம்மா பாடல் இவரை இன்னும் பிரபலப்படுத்தியது. அந்தப் பாடல் கொடுத்த பிரபலம் தற்பொழுது தளபதி விஜயை வைத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டால் ஆக்டிவாக இருக்கும் பூஜா தனக்கு நேரம் கிடைக்கும் போது தனது ரசிகர்களிடம் உரையாடி வருவார். ரசிகர்கள் ஏதாவது கேள்வி கேட்டு வருவார்கள் அதற்கு பூஜாவும் பதிலளித்த ஒருவர் அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் பூஜா.

ரசிகர் ஒருவர் நீச்சல் குளத்தில் உள்ள புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று கேட்டதற்கு நீச்சல் குளத்தில் குளிப்பது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

மற்றொரு ரசிகர் மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று கேட்டதற்கு மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் பூஜா.

மற்றொரு ரசிகர் ஒருவர் கேட்ட ஏடாகூடமான கேள்வி பூஜாவை சற்று டென்ஷன் ஆக்கியது. உங்களின் அந்த மாதிரியான புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று அவர் கேட்க பூஜா அவரது கால்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.

ரசிகர்கள் இதுபோல கேள்விகள் கேட்கலாமா என்று ஒரு தரப்பினர் கேட்டு வரும் நிலையில் மற்றொரு தரப்பினர் ஏன் நடிகைகள் இதுபோல புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles