Saturday, May 4, 2024
-- Advertisement--

உலகமே எதிர்பாத்துக்கொண்டு இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெளியிட்டு தேதி இதோ…!!! சந்தோசத்தில் ரசிகர்கள்.

தெலுங்கு சினிமாவில் பாகுபலி கன்னட சினிமாவின் கே ஜி எஃப் என்று பிரம்மாண்ட திரைப்படங்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கும்போது தமிழ் சினிமாவில் எந்த ஒரு பிரம்மாண்ட படைப்பும் வெளியில் வராமலே இருந்தது. தொடர்ந்து வருத்தத்தில் இருந்தால் தமிழ் ரசிகர்கள்.

தெலுங்கு மற்றும் கன்னடாவில் பிரம்மாண்டமான படைப்புகளை உருவாக்குகிறார்கள் தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் வந்த கதையை வைத்து எடுத்து வருகிறார்கள் என்று தங்களது கோபத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அனைவருக்கும் மிகப்பெரிய ஆறுதல் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று கதையை தமிழில் மணிரத்தினம் எடுப்பது தான்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழர்களின் பெருமையை வெளி உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் அது மட்டுமல்லாமல் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் படமாக அமையும் என்று பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்துள்ளார். வந்திய தேவன் என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். குந்தவை என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார். மண்டக்கிணி தேவி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்து உள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் எப்போது திரைக்கு வருகிறது என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ள இந்நிலையில் படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் இன்று வருகிறான் சோழன் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் படம் வெளியிட்டு தேதியும் அறிவித்துள்ளார்கள்.

வருகின்ற 30 -9 -2022-ல் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles