Friday, May 17, 2024
-- Advertisement--

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அதிமுக மாணவரணி செயலரை கட்சியில் இருந்து அதிரடியாக தூக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!!!

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது அனைவரும் அறிந்ததே. ஒரு இளம்பெண்ணை பெல்ட்டால் அடித்து தனது ஆசைக்கு இணங்க வைத்து அந்த பெண் வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் எச்ச ஆசைகளைத் தீர்த்துக் கொண்டு அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்ட கும்பல் இரண்டு வருடங்களுக்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சிக்கியவர்கள் ஒரு சில பிரமுகர்களின் ஆட்கள் என்பதால் சரியான நியாயம் கிடைக்காமல் இருந்தது. அதன்பின் இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாறியது. இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கை தீவிரமாக ஆராய்ந்து வரும் சிபிஐ அதிகாரிகளுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாம்.

நேற்று இரண்டு வருடங்களுக்கு பிறகு மேலும் மூன்று நபர்களை கைது செய்தார்கள் சிபிஐ அதிகாரிகள். அந்த மூவரில் ஒருவர் அருளானந்தம் என்பவர் அதிமுக மாணவரணி செயலாளராக செயல்பட்டு வந்தார். தற்பொழுது அருளானந்தை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார்கள்.

தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் கட்சியின் கொள்கை குறிக்கோள்க்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், ஆளும் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதினாலும் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளர் கே அருளானந்தம் நேற்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் அவரிடம் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அந்த அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles