Sunday, May 19, 2024
-- Advertisement--

17 வயதில் இணைய பாதுகாப்பு சேவை நிறுவனம் நடத்தி 15 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்த மன்னார்குடி பள்ளி மாணவர்க்கு எஸ்பி பாராட்டு.

17 வயதில் இணையதள குற்றங்களை தடுக்கும் நிறுவனம் தொடங்கி மன்னார்குடி பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார் இதை அறிந்த திருவாரூர் எஸ் பி எம் துரை அவர்கள் அந்த மாணவரை நேரில் வரவழைத்து பாராட்டி மகிழ்ந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சார்ந்த குருமூர்த்தி செல்வி தம்பதியின் மகன் பிரகதீஸ்வரன் இவருக்கு வயது பதினேழு, இவர் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

படிக்கும்போதே இணையத்தில் நடக்கும் குற்றங்களை தடுப்பதற்காக 2020ம் ஆண்டு ஏப்ரலில் பிரைவேட் லிமிடெட் என்ற சைபர்கிரைம் கம்பெனி ஒன்றை தொடங்கி பெரிய நிறுவனங்களில் இணையதளங்களை முடக்கும் செய்யப்படுவதை பாதுகாக்கும் இணையத்தை யார் முடக்கு கிறார்கள் என்று கண்டுபிடித்து உள்ளார்.

இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிக ஆய்வு செய்த வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் 17 வயதில் இத்தகைய நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருவதை பாராட்டி பிரகதீஸ்வரன் க்கு அஞ்சல் மூலம் பாராட்டி கௌரவித்தனர்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட எஸ்.பி.எம் துரை அவர்கள் மாணவர் பிரகதீஸ்வரன் நேரில் வரவழைத்து பாராட்டி மகிழ்ந்தது உடன் அவருடைய நிறுவனம் பற்றி செயல்பாடுகளை கேட்டு தெரிந்து கொண்டார்.

இதுபற்றி பிரகதீஸ்வரன் கூறியது பத்தாம் வகுப்பு படிக்கும்போது இணையதளங்களை பாதுகாப்பது மற்றும் ஹேக்கர்கள் குறித்த கட்டுரைகளின் அதிகம் படிப்பேன் அதில் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததால் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிதாக ஒரு நிறுவனம் தொடங்கி 27 நிறுவனங்களை அணுகி அவர்களது இணையதளங்களை பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்து சான்றிதழ் பெற்றுள்ளேன் தற்பொழுது எனது நிறுவனத்தில் 15க்கும் மேற்பட்ட பணியாற்றி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்று அப்துல் கலாம் சும்மாவா சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள் பிரகதீஸ்வரன்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles